HOME 18 படித்தளங்கள் GURUJI  SPEECH தியானத்தின் முதற்படி மந்திரத்தின்  முக்கியத்துவம் மும் மலங்கல் 26 நற்குணங்கள்  
 
 
நீக்கிமலக் கட்டறுத்து
நேரேவெளியில் எமமைத்
தூக்கி வைக்கும் தாளைத்
தொழுதிடுநாள் எந்நாளோ
                                        - தாயுமாணவர்

' ஆசை, ' பகை, ' பயம் என்ற மூன்றும் தான் மனிதன் பகவானை நினைக்க விடாது கட்டி போட்டு விடுகிறது. இவைகளின் கட்டை நான் வெட்டியெறிந்து விட்டு பகவானே உனது பாதத்தை விடாது தொழுது கொண்டிருக்கும் நாள் எப்பொழுது எனக்கு வருமோ என்ற தாயுமாணவர் ஏங்கி பாடுகிறார். பொதுவாக ஒரு இருள் நிரம்பிய அறையில் மின்சார விளக்கு இருந்தாலும் அதன் சுவிட்சை போட்டால்தான் வெளிச்சம் தருகிறது. இதை போன்றுதான் நாமும். இறை சக்தி நிறைந்திருந்தாலும் நாம் அதை பயன்படுத்தாதிருந்தால் விளக்கு இருட்டில்தான் இருக்கும். அது வெளிச்சம் தராது. பகவானை தினம் 100 தடவை நினைத்து மந்திரம் சொல்லிப்பழகுங்கள். பிறகு 1000 தடவையாக மாற்றுங்கள். அடுத்து எதைச் செய்தாலும் பகவானை நினைத்துக் கொண்டே அனுதினமும் மந்திரம் சொல்லிக் கொண்டே இயங்கப் பழகுங்கள்.