HOME GURUJI  SPEECH யார் பிரம்மச்சாரி தியானத்தின் முதற்படி கீதை   தத்துவம் இறை வணக்கம் 26 நற்குணங்கள்  
 

யார் பிரம்மச்சாரி

இறந்த ஆசையும்
நிறைந்த அன்பும் கொண்டதே
சிறந்த பிரம்மச்சரியம்.

பிரம்மமான பகவானைச் சார்ந்திருப்பவர்தான் பிரம்மச்சாரி. பிரம்மத்தைச் சார்ந்திருபவருக்கு அச்சம் என்ற பெரிய இருள் மறைந்து வெளிச்சத்தில் என்றும் இருப்பர்.

வெளிச்சம் என்பது பேரன்பு, நிலையான இறை நினைப்பு, இதனால் தொடர்ந்து பகவானின் தரிசனம் பெறுவதலாகும்.

பொதுவாக ஆசைகளை வென்றுவிடுவது எளிதல்ல. என்றாலும் இடைவிடாத இறைநினைப்பால் கண்டிப்பாக பிரம்மத்தைச் சார்ந்திருப்பவர்கள் வென்றுவிடுவர். ஏனென்றால் இவர்களது உணவு சத்துவகுணம் கொண்டதாக இருக்கும். இவர்கள் குரு அருள்நிறைந்தவர்களாக இருப்பர்.

மனம், வாக்கு, உடல் என்ற மூன்று காரணங்களும் அடிக்கடி சிற்றின்ப ஆசையால் மனிதர்களை சிதறடித்துவிடும்.

ஆனால் நமது எண்ணத்தை புத்தியின் உதவியால் பகவானிடமே செலுத்தி வணங்கி வந்தால் வெற்றி பெறுவது என்பது உறுதியாகும்.

தொடர்ந்த தியானத்தால் உடல் புதிய மாற்றம் பெறும். உள்ளம் பேரானந்தத்தால் பரிசுத்தமடையும்.

இவர்கள் உள்ளம் பரிசுத்தமடைவதால்

ஞானக்கண் ஊடுறுவி அறியும் ஆற்றல்பெறும்

மூடிய புத்தகத்தை படிக்கமுடியும்

உட்கார்ந்த இடத்தில் உலகத்தை பார்ப்பர்

பொதுவாக பிரம்மச்சரியத்தின் தத்துவம் மூச்சுக்காற்று போன்றதாகும். காற்று மனித வாழ்க்கைக்கு முக்கியமானதாக இருந்தாலும், மூக்கில் சுவாசம் ஓடிக்கொண்டிருந்தாலும் எந்த இடத்திலும் அந்த மூச்சுக்காற்று ஓட்டிக்கொண்டு உடம்பில் உறவு வைத்துக் கொள்வதில்லை. ஆனால் உடலும் காற்றும் இணைந்து தான் செயல்படுகிறது. சேர்ந்து செயல்படுவதே வாழ்க்கை. அதில் மூழ்குவதில்லை என்பதை உணர வேண்டும்.

யார் பிராமணன் ? பிரம்மத்தை உணர்ந்தவர் பிராமணன்

எல்லாவற்றையும் விட்டு விட்டு பக்தன் உண்மையில் நித்தியத்தில் பங்கு உடையவன் ஆவான். அவன் என்னுடன் எப்பொழுதும் கலந்து விடுவான்.

தனக்கென்று விதிக்கப்பட்ட கடமைகளை ஒருவர் ஒருபோதும் செய்யாது சோம்பேறியாக இருந்து விடக்கூடாது. அந்தக் கடமையை செய்யாது இருந்து விட்டால் அது குற்றமாகும்.

இப்படி நமது கடமைகளை கூறும் கீதை பக்தர்களை ஐந்து வகைகளாகப் பிரித்து தன்னை மனதில் நிலைப் படுத்திக் கொண்டவரே மட்டும் பிராமணர் என்று நம்மைத் தெளிய வைக்கிறது.

ஒருவர் பிரம்மத்தில் நிலைப்பட்டு நிற்க ‘26’ நற்குணங்கள் நம்முள் நிலைப்பட வேண்டும். அப்படி முழுமையாக நின்றுவிட்டால் அதுவே முழுமையான சத்துவ குணம்.

பிரம்மத்தை உணர்ந்து கொண்ட இவர்கள் படிப்படியாக முழுமையான இறைநிலையை அடைவர். தூர தரிசனம் இவர்களிடம் இருக்கும். எதையும் அடையவோ, எதையும் இழக்கவோ ஒன்றும் இவர்களுக்கு இல்லை.

தண்ணீரில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருப்பவன் தனது முகத்தை தண்ணீரில் பார்க்க முடியாது. இதுவே உலக வாழ்க்கை.

ஆனால் அதே மனிதன் தண்ணீரைவிட்டு மேலே வந்தபின் தெளிந்த நீரில் தனது முகத்தை நன்கு பார்க்க முடியுமல்லவா? இதுவே ஞானவாழ்க்கை

விசுத்தி மகேசுரனை விழிதிறந்து பாராமல்

பசித்துருகி நெஞ்சம் பதறினேன் பூரணமே

பட்டினத்தார் நான் கண்விழித்து பகவானைப் பார்க்காமல் பசிக்குதே என்று நெஞ்சம் பதறினேன் என்று வருந்தி பாடுகிறார்.

கடவுளை அடையவேண்டும்

என்று நினைப்பவன் பாக்கியவான்.

அவர்கள் எண்ணம் வெற்றி பெற

இறை நினைப்பு, சேவை

என்ற உழைப்பு வேண்டும்.