HOME GURUJI  SPEECH யார் பிரம்மச்சாரி தியானத்தின் முதற்படி கீதை   தத்துவம் இறை வணக்கம் 26 நற்குணங்கள்  
 

பஞ்ச பாண்டவர்களின் தூதராக, கிருஷ்ண பகவான் துரியோதனனின் அரண்மனைக்குச் சென்றிருந்தார்.

அப்போது துரியோதனன், "கிருஷ்ணா! உனக்காக பிரமாதமான விருந்துக்கு இன்று ஏற்பாடு செய்திருக்கிறேன். நீ இங்கேயே உணவு உட்கொள்ள வேண்டும்" என்று கேட்டுக் கொண்டான்.

அதற்கு கிருஷ்ண்ன், "துரியோதனா! நான் உன்னுடைய விருந்தை இப்போது ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. அவை

1) நீ என் மீது பக்தி கொண்டு நல்லவர்களாக வாழும் பாண்டவர்களுக்கு தீங்கு செய்தாய். என் பக்தர்களுக்குத் தீங்கு செய்பவர்கள் கொடுக்கும் உணவை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

2) நீ தர்மம் தவரி நடப்பவன். பெரியவர்களை அவமதிப்பவன். ஆதலால் நீ கொடுக்கும் உணவு எனக்கு வேண்டாம்.

3) நான் இப்போது பாண்டவர்களின் தூதுவனாக வந்துள்ளேன். தூதுவன் தான் வந்த காரியத்தை முதலில் முடிக்க வேண்டும். அது முடிந்த பின்புதான் விருந்து" என்று துரியோதனனிடம் தெளிவாக எடுத்து கூறினார்.

குறிப்பு: மற்றவர்களுக்குத் தீங்கு செய்பவர்களுக்கும், தர்மத்தை மீறி நடப்பவர்களுக்கும், பெரியோர்களை மதிக்காதவர்களுக்கும் கடவுள் அருள் கிட்டாது. இவர்கள் கோயில் உண்டியலில் எவ்வளவு பணம் போட்டாலும் அதனால் இமியளவும் பயனில்லை. இதுவே கீதை கூறும் தத்துவம்.