| கதையும்
கருத்தும் :
காட்டுப் பகுதியின் அருகாமையில் உள்ள புதூரில்
விமலன் என்ற பதிநான்கு வயதுச் சிறுவன் தன்னந்தனியாக
வறுமையில் வாழ்ந்து வந்தான். இதனால் அவனுடைய
8-ம் வகுப்பு படிப்பு முடிந்தவுடன் பல வீடுகளில்
வேலை செய்து வாழத் துவங்கினான். அரசர் ஆட்சிக்
காலமானதால் அரசாங்க வேலைவாய்ப்பு இந்த சிறிய
கிராமவாசிகளுக்கு கிடைப்பதில்லை. ஒருநாள்
ஊருக்கு வெளியில் இருந்த அரச மரத்தடியில்
சிந்தனையோடு அமர்ந்திருந்தான். அங்கு அமர்ந்திருந்த
பெரியவர் 'தம்பி இங்கே வா' என்று கூப்பிட்டார்.
உடனே எழுந்து சென்று அவரை நமஸ்காரம் செய்து
காலைத் தொட்டு கும்பிட்டான். ஐயா, 'கூப்பிட்டீங்களா'
என்றான். ஆமாம், 'நீ தனியாக சும்மா இருக்கும்போதும்,
வேலை செய்யும் போதும் தொடர்ந்து மந்திரங்களை
உச்சரித்து வந்தால் மூன்று வருடம் முடிந்தபின்
நீ ராஜாதி ராஜனாகி விடுவாய்' என்று அருள்வாக்குக்
கூறினார். அதற்கு விமலன் 'ஐயா எனக்கு எனது
வறுமை நீங்கினால் போதும்' என்று அடக்கமாகக்
கூறினான். அப்போது பெரியவர், 'தியானத்தின்
பலன் மிகப் பெரியது, அதனால் தியானம் துவங்க,
அந்தத் தியானம் உயர்வு பெற, நமக்கு அது பலன்
அளிக்க மந்திரம் கூறுவது மிக முக்கியமாகும்'
என்று கூறி பின்வரும் வரிகளை அடுக்காகச் சொல்லிவிட்டு
சென்று விட்டார்.
மந்திரம் தெரிந்தாலும் அதை மறப்பவர் உலகில்
பலர்
மந்திரங்களை தனது மூச்சாக நினைப்பவர் ஒரு
சிலர்
மந்திரங்களே ஞான அக்கினி இது தியானத்தின்
தீப்பொறி
விமலன் அன்று முதல், இரவு - பகல் என்று பாராமல்
அடை மழைபோல் மந்திரங்களை மனதில் பொழிந்து
கொண்டே இருந்தான். வறுமைகள் தொடர்ந்ததோடு
மட்டுமல்லாது பிரச்சனைகள் பல வந்தன. ஆடிக்கடி
வழிகாட்டிய பெரியவரிடம் தானாகவே மனதில் அவரைக்
கொண்டு வந்து நிறுத்திப் பேசுவான். ஒரு நாள்
கனவில் அவர் தோன்றி 'உள்ளத்தில் கோயில் எழுப்பி
பகவானுக்குப் பூப் போட்டு மந்திரம் கூறு'
என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். பிறகு
இவனது தியானம் வேகமடைய ஆரம்பித்தது. அடிக்கடி
உள்ளத்தில் உள்ள கோயிலில் அபிஷேகங்கள், தீப
ஆராதனை, அர்ச்சனைகள் என்று அடுக்கடுக்காக
வேலையோடு வேலையாக உள்ளே இதை யாருக்கும் தெரியாமல்
நடத்திக் கொண்டே இருந்தான். மூன்று வருடம்
ஆனது. அவன் வேலை பார்த்த வீட்டில் ஏதோ ஒரு
பொருள் காணாமல் போய்விட்டதால் வறுமையில் இருந்த
இவன்மேல் சந்தேகப்பட்டு அடித்து விட்டார்கள்.
ஆனால் அந்த பொருள் வீட்டில் இருந்தது தெரிந்து
விமலனை விட்டு விட்டார்கள். வாலிபம் வந்தும்
வறுமை போகவில்லை. இந்த ஊரில் மரியாதையில்லை.
இனிமேல் வாழ்வதைவிட எங்காவது காட்டுப்பகுதியில்
போய் இறந்து விடலாம் என்ற முடிவோடு புறப்பட்டு
செல்கிறான். வழியில் பார்த்த குளத்தில் விழுந்து
செத்து விடலாம் என்று அதில் இறங்கினான். அங்கே
தண்ணீர் குறைவாக இருந்தது. அதில் ஒரு ஆமை
வந்து இவனிடம் பேசியது. 'விமலா நீ என்னை தண்ணீர்
அதிகம் உள்ள குளத்தைப் பார்த்து விட்டுவிடு.
இங்கு தண்ணீர் குறைந்து விட்டது' என்று கூறியது.
விமலனுக்கு ஒரே ஆச்சரியம். உடனே ஆமையைத் தூக்கிக்
கொண்டு அலைந்து திரிந்து ஒரு பெரிய ஏரியை
கண்டுபிடித்து அதில் கொண்டு போய் விட்டான்.
ஆமை சந்தோஷமாக 'விமலா நீ செய்யும் தியானம்
உயர்வானது. உனக்கு தண்ணீருக்குள் ஏதாவது உதவி
தேவைபடுமானால் என்னை தியானம் செய்து நினை
உனக்கு உதவ வருவேன்' என்று கூறி மறைந்தது.
விமலனுக்கு ஒன்றும் புரியவில்லை. 'பகவானே!
அடைமழை ஓய்ந்தாலும் என் வாழ்வில் செடிமழை
விடமாட்டேங்கிறது. எது எப்படியோ எல்லாம் உங்கள்
செயல். இனிமேல் எனக்கு பயம் போய்விட்டது'
என்று தனிமொழி பேசிக் கொண்டே ஏரிக்கரையில்
நடந்தான். விமலனுக்கு தாகமாக இருந்தது. ஏரியில்
தண்ணீர் குடித்துவிட்டு ஏரிக்கரையில் இருந்த
மரத்தின் நிழலில் ஓய்வெடுக்கச் சென்றான்.
அங்கே மானிற்கு விரித்த வலையில் அன்னப்பட்சி
மாட்டிக் கொண்டிருந்தது. உடனே 'விமலா என்னைக்
காப்பாற்று. வேடன் வந்தால் என்னை சாப்பாட்டு
பொருளாக்கி விடுவான்' என்றது. விமலன் தனது
இடுப்புக் கயிறில் தொங்கிய சிறிய சூரிக்கத்தியை
எடுத்து அந்த வலைகளை அறுத்து அன்னத்தை விடுவித்தான்.
அன்னம் வெளியானதும் 'விமலா மிக்க நன்றி. உனக்கு
ஏதும் உதவி தேவைபடுமானால், தியானம் செய்து
என்னைக் கூப்பிடு, உனக்கு உதவ நான் வருவேன்'
என்று கூறிப் பறந்த சென்றது.
இந்த நிகழ்ச்சிக்குப்பின் ஒரு முடிவுக்கு
வந்தான். இனிமேல் பக்கத்து நாட்டிற்க்குச்
சென்று பிழைக்க வழிதேடுவோம் என்று மந்திரம்
கூறியவாறு நெடிய தூரம் நடந்து பயணம் செய்தான்.
பயணக் களைப்பில் ஒரு மரத்தடியில் சிறிது நேரம்
படுத்தான்.
திடீரென சிங்கத்தின் கர்ஜனை கேட்டது. எழுந்து
அங்கும் இங்கும் தேடிப் பார்த்தான். சிங்கம்,
மானிற்காக வேடன் விரித்த வலையில் வசமாக பின்னிக்
கொண்டு நின்றது. சிங்கம் பேசியது 'விமலா நான்
மூன்று நாள் பட்டினியாக சிக்கித் தவிக்கிறேன்.
என்னை நீதான் விடுவிக்க வேண்டும்' என்று கூறியது.
உடனே சூரிக்கத்தியை எடுத்துக் கொண்டு அருகில்
சென்றான். மனம் வேலை செய்ய ஆரம்பித்தது. வெளியில்
வந்தால் பசியில் வாடும் சிங்கம் நம்மை விடுமா
என்று கேள்வி வந்தது. பிறகு நாமோ சாவதற்கு
வந்தோம். அடுக்கடுக்காக பகவான் அதிசயம் காட்டுகிறார்.
பறவைகள், மிருகங்கள் பேசுவது நமக்குப் புரிகிறது.
இதனால் நாம் உதவி செய்வதை நிறுத்த வேண்டாம்
என்று முடிவெடுத்து வலையை வெட்டிவிட்டு சிங்கத்தை
விடுவித்தான். சிங்கம் வெளியில் வந்து நமஸ்காரம்
செய்துவிட்டு 'விமலா உனக்கு காட்டில் என்
உதவி தேவைப்படும் போது என்னை தியானம் செய்து
கூப்பிடு, நான் வந்து உனக்கு உதவுவேன்' என்று
கூறி ஓடிவிட்டது.
புதிய தெம்பும் அரிய அனுபவமும் பெற்ற அடுத்த
நாட்டிற்குள் நுழைகிறான். அந்த நேரத்தில்
ஒரு புதிய செய்தியை அந்த நகரத்தில் கேட்கிறான்.
அந்த நாட்டு இளவரசி மனிதர்களை நான் திருமணம்
செய்து கொள்ள மாட்டேன். அன்னப்பறவையில் பிரம்மா
வந்து என்னைத் திருமணம் செய்வார். அதுவரை
திருமணத்தைப் பற்றி என்னிடம் பேசாதீர்கள்
என்று கூறியிருந்த புதிய செய்தி தான் அது.
அன்று இரவு பௌர்ணமி. பட்டப்பகல் போல் நிலவொளி.
உடனே தியானத்தில் அமர்ந்து அன்னப்பறவையை அழைத்தான்.
அன்னம் பறந்து வந்து நின்றது. விஷயத்தைச்
சொன்னான். உடனே பெரிய உருவம் எடுத்து விமலனை
ஏற்றிக் கொண்டு பறந்து போய் அரண்மனை மொட்டை
மாடியில் அரசனும், இளவரசியும் நிலவொளியைப்
பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும்போது அழகாக
இறக்கியது. இருவரும் விமலனின் வரவை பிரம்மாவின்
வரவாக எண்ணி மகிழ்ந்து விட்டனர். உடனே விமலன்
தங்குவதற்கு, இளவரசியே ஏற்பாடுகள் செய்து,
அரச உடைகள் அளித்து, உணவளித்து உபசரித்தாள்.
வயதான அரசனுக்கு பிரம்மா ஆகாயத்தில் இருந்து
அன்னப்பரவையில் வந்து இரங்கியதைப் பார்த்து
மகளின் விரதம் வெற்றி பெற்றதை நினைத்து பெருமிதம்
கொண்டார். எது எப்படி போனாலும் பக்தனுக்கு
பகவான் அருள் செய்ய துவங்கிவிட்டால், யாரால்
அதை நிறுத்த முடியும். இதையெல்லாம் அறிந்த
நாரத முனிவர் பிரம்மாவிடம் கூறுகிறார். பிரம்மா
பகவானிடம் முறையிடுகிறார். ழூவரும் மனிதரூபத்தில்
விமலன் படுத்திருந்த அரண்மனை அறையில் தோன்றுகிறார்கள்.
அப்போழுது ஆழ்ந்த தியானத்தில் மூழ்கியிருக்கிறான்.
உடனே விமலனைத் தட்டி எழுப்பிய நாரத முனிவர்,
'எப்படி நீ பிரம்மா என்று கூறி இங்கு வந்தாய்'
என்று கேட்கிறார். அதற்கு விமலன், நான் எங்கே
இங்கு வந்தேன் பகவான் என்னை கூட்டி வந்து
படுக்க வைத்திருக்கிறார். அவர் என்னுள் இருந்து
என்னை ஆட்டிவிக்கிறார். நான் அவரை நினைப்பதிலேயே
கவனமுடன் இருக்கிறேன் என்றான். மாறுவேடத்தில்
மனிதராக இருக்கும் பகவான், அப்படியானால் 'நான்
கையில் அணிந்திருக்கும் இந்த மோதிரத்தை கடலில்
போட்டுவிடும்படி செய்து விடுகிறேன்'. நீ அதை
எனக்கு எடுத்து கொடுத்து விடுவாயா? என்று
கேட்டார். உடனே தனது தியானத்தை தீவிரப்படுத்திப்
பார்க்கிறான். அவனது உள்;ளத்தில் பகவான் காட்சியளிக்கிறார்.
வெளியி;ல் இருப்பது யார் என்பதும் புரிந்து
விடுகிறது. உடனே காலில் விழுந்து சாஸ்டாங்க
நமஸ்காரம் செய்கிறான். தனது கருட வாகனத்தை
வரச் செய்து மோதிரத்தை கடலில் போட்டு, விமலனை
அதை எடுத்து வரச் சொல்லுகிறார். உடனே தனது
தியானத்தில் பகவானை வணங்கி ஆமையிடம் விசயத்தைக்
கூறினான். ஆமை கடல் ஆமையி;டம் கூற, கடல் ஆமை
மோதிரத்தை எடுத்து வர அதை அன்னப்பறவை வாங்கி
வந்து அவனிடம் கொடுக்க உடனே பகவானிடம் அந்த
மோதிரத்தை தந்து விடுகிறான்.
பகவான் பிரம்மாவிடம் கூறுகிறார். 'இவனால்
உனக்கு எந்த பிரச்சனையும் வராது. இவன் என்னுடைய
'பிரதிநிதி' எனது சிறந்த தொண்டன்' என்று கூறி
மறைகின்றார். விமலன் இளவரசி திருமணம் சிறப்பாக
நடைபெறுகிறது. வயதான அரசன் விமலனை அரசனாக்குகிறான்.
உடனிருக்கும் தளபதி, மந்திரி போன்றவர்களுக்கு
இது பிடிக்கவில்லை.
விமலன் ஆட்சிக்கு வந்த ஒரு வாரத்திலேயே கிழக்கிலும்,
மேற்கிலும் இருக்கும் பக்கத்து நாட்டு அரசர்கள்
படை எடுத்து காட்டுப்பகுதியில் வருவதாக ஒற்றர்கள்
வந்து கூறுகின்றனர். ஆனால், தளபதி யுத்தம்
செய்ய முடியாது, இரண்டு நாடுகளும் சேர்ந்து
கொண்டதால் அவர்களிடம் பணிந்து போய் விடுவதுதான்
மேலான செயல் என்று கூறுகின்றான். விமலன்,
'உடனே யாரும் யுத்தம் செய்யப் போக வேண்டாம்
இந்த பிரச்சனையை நான் பார்த்துக் கொள்கிறேன்'
என்று கூறிவிடுகிறான். ஆனால், நாட்டில் ஒரே
குழப்பம். சிறுவனை, யுத்தம் தெரியாத ஒருவனை
அரசனாக்கி நாடே பறிபோகப் போகிறது என்ற பதட்டம்
ஒரு பக்கம். விமலன் அமைதியாக தியானத்தில்
அமர்ந்து சிங்கராஜாவை கூப்பிட்டான். உடனே
அவனது உள்ளத்தில் உள்ள தொலைக் காட்சியில்
சிங்கம் தோன்றியது. விசயத்தைக் கூறினான்.
அங்கிருந்த இரண்டு பக்க காட்டில் இருக்கும்
சிங்கம், புலிகலுக்கு ஆணை பிறப்பிக்கப்ட்டது.
படையெடுத்து வந்த இரண்டு பக்கத்து நாட்டு
அரசர்களும், தளபதிகளும், சிங்கங்களால் கிழித்து,
குதறி எறியப்பட்டனர். புலிகள் படைகளை சீர்குலைத்து
விரட்டியது. ஒரு மணி நேரத்தில், இரண்டு பக்கமும்
போர் முடிந்தது. இதை மரத்திலிருந்து ஒற்றர்கள்
பார்த்து வந்து அரச சபையில், அரசர் விமலனிடம்
கூறினர். நாடே ஆச்சரியத்தில் மூழ்கியது, எது
எப்படி போனாலும் ஞானம், தியானம், மெய்ஞ்ஞானம்
இவைகளுக்கு புகழ்பெற்றது நம் நாடு. இப்படிப்பட்ட
தியான சக்தியை படிப்படியாக வளர்த்துக் கொள்ள
ஒவ்வொருவரும் கடமைப்பட்டிருக்கிறோம்.
இடைவிடாத இறை நினைப்பே தியானம்
தியானம் தீவிரமடைவதே தவம்
தவத்தின் முடிவே முக்தி.
|