இறை
வணக்கம் |
| இறை
வணக்கம் எப்படி இருக்க வேண்டும்.
? |
| |
|
| |
“தனக்கு
தகுந்த உணவைத்
தானே
கண்டுகொள்வதை போன்று தனக்கு
உகந்த இறை வணக்க வகைகளைத்
தானே
கண்டு கொள்ள
முடியும்" |
| |
|
| |
உலகப்
பற்று இருக்கே அது ரொம்பப்
பொல்லாதது. அது மனிதனை
மேலும், மேலும் ஆசை ஊட்டி
படு பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டு
கைதட்டி சிரிக்கும். ஆனால்
இறைவணக்கம் உள்ளவர்களிடம்
அதன் சே~;டை செல்லுபழயாகாது. |
| |
|
| |
அடிக்கடி
இறைவணக்கம் உங்கள் உள்ளத்தில்
செய்து வரப்பழகிவிட்டால்
உலகப்பற்று உங்களை ஒன்றும்
செய்து விட முடியாது. அறிவுத்திறன்
பலருக்கு இருக்கும். ஆத்ம
பலம் சிலருக்குதான் இருக்கும்.
ஆனால் இறைவணக்கத்தால் அதை
சாதிக்கலாம். |
| |
|
| |
இறைவன்
திட்டப்படியே எல்லாம் நடந்து
வருகிறது. ஆதில் நல்லதை
எண்ணி உழைப்பது மனிதனின்
கடமையாகும். பொதுவாக மனிதன்
ஆசைப்படுவதெல்லாம் நடந்து
விட்டால் உலகம் குழப்பமாகிவிடும். |
| |
|
| |
உழைப்பு
என்பது இரண்டுப் பக்கம்
இருக்க வேண்டும். ஒன்று
உலக வாழ்வில், மற்றொன்று
இறை வாழ்வில். ஆனால் உழைப்பிலும்,
பிழைப்பிலும் அவ்வப்போது
இறைவனை தனக்குள்ளே வணங்குவதுதான்
முறையான இறைவணக்கம் என்பதை
ஒருபோதும் மறந்து விடாதீர்கள் |
| |
|
| |
‘குழந்தையும்
தெய்வமும் ஒன்று’ என்று
சொன்னதின் பொருள் என்னவென்றால்
அந்தப் பருவத்தில், தான்
பெற்றிருந்த இனிய இயல்பை
இழந்துவிடாது அதை காப்பாற்றுபவன்
இறைநிலை உள்ளவன் ஆகிறான்.
உலக வாழ்வு என்ற உறக்கத்திலிருந்து
நாம் விழித்துக் கொள்ள
அவ்வப்போது இறைவணக்கம்
மனதில் செய்யவெண்டும். |
| |
|
1 |
உதாரணமாக
வாகனத்தில் பயணம் செய்கிறோம்
என்று வைத்துக்கொள்வோம்.
பயணத்தின் துவக்கத்தில்
இறைவணக்கம் இருக்க வேண்டும்.
|
| |
|
2 |
அந்தப்
பயணத்தில் அடிக்கடி மனம்
எங்கெங்கோ பறந்து செல்லும்.
அப்பொழுது பிடித்து இழுத்து
வந்து பகவானை நினைக்க வைத்துவிடவேண்டும்.
|
|
|
3 |
அத்துமீறி
மனம் உள்ளத்தில் நுழைய
மறுத்தால் சத்தம் போட்டு
பாட்டு பாடுவதுபோல் மந்திரம்
சொல்லி தன் வழிக்கு கொண்டுவர
வேண்டும். |
|
|
4 |
அதிபயங்கரமான
குழப்பம் ஏற்படும் போதும்,
சந்தேகம் வரும் போதும்
பக்தி பாடல்கள் கேட்டு
மனதை திருப்பலாம். நல்ல
பக்தி பேச்சுக்கள், கீதை,
சற்குரு தியானம் போன்ற
நூல்களை எடுத்து படிக்கலாம்.
|
|
|
5 |
யாராவது
வெட்டி பேச்சு பேசவந்தால்
பகவானிடம் முறையிட்டு சிறிது
நேரத்தில் அவர்களிடமிருந்து
தப்பித்து பகவானை நினைக்க
பழக வேண்டும் |
|
|
6 |
தொழில்
நிமித்தமான பேச்சுக்களின்
துவக்கத்தில், இடையில்,
முடிவில் இறைவணக்கம் தேவை. |
|
|
7 |
நல்லவர்களின்
சற்சங்கம் சிறிது நேரம்
கேட்டபிறகு இறைவணக்கம்
சிறப்பாக இருக்கும். |
|
|
8 |
படுத்துக்கொண்டே
இறைவணக்கம் செய்வதில் நல்ல
அமைதியும், ஆழ்ந்த உணர்வும்
கிடைக்கும். இதை படுக்க
போகும் போதுதான் செய்ய
வேண்டும். |
|
|
9 |
உலக
வாழ்வில் பிறத்தியாரிடம்
கையேந்தாமல் இருப்பது மேன்மையானது.
உழைப்பும், இறைவணக்கமும்
கலந்திருப்பது பாலும்,
தேனும் கலந்தது மாதிரியாகும். |
|
|
10 |
ஞானகுருவின்
தெளிந்த பேச்சும், அறவனைப்பும்,
கண்டிப்பும், அவர்சொல்லித்தரும்
இறைவணக்கமும் உங்கள் வாழ்வையும்,
ஞானப்பாதையும் உயர்வடையச்
செய்யும். |
| |
|
| |
|
கதையும் கருத்தும்
திருநின்றவூரில் சின்னகருப்பன், பெரியகருப்பன் என்ற சகோதரர்கள் வாழ்ந்துவந்தனர். இருவரும் இறைவணக்கம் செய்வதில் சிறந்தவர்கள். இளமையிலேயே இருவரும் இடைவிடாது பகவானை நினைப்பதில் போட்டிப் போட்டு தியானிக்கும் பழக்கமுடையவர்கள்.
சின்னக்கருப்பன் சிறிய வண்டி வைத்துக் கொண்டு சாமான்களை ஏற்றி வந்து கடைகளுக்கு போட்டு சம்பாதனை செய்து கொண்டிருந்தான். ஆனால் பெரிய கருப்பன் முழுநேரமும் கோயிலில் இருக்க ஆரம்பித்து விட்டான்.
ஒரு நாள் கோயிலுக்கு ஒரு ஞானகுரு வந்திருந்தார். அப்பபொழுது அங்குள்ள மண்டபத்தில் படுத்திருந்த பெரியகருப்பனை பார்த்து ‘யார் இவர்’ என்று கேட்டார்.
அங்குள்ளவர்கள் அவர் அனுதினமும் இறைவணக்கத்திலேயே இருப்பவர், யாரிடமும் பேசமாட்டார் என்றனர்.
உடனே ஞானகுரு ‘சாப்பாட்டிற்கு என்ன செய்கிறார்’ என்று கேட்டார்
அவருடைய தம்பி வண்டி ஓட்டிப் பிழைக்கிறார். அவர் தரும் சாப்பாட்டில் உயிர்வாழ்கிறார்.’ என்றனர்.
உடனே அவரை எழுப்பி கூப்பிட்டு வரச் சொல்லி அழகான தெளிவான அரிவுரைகளை வழங்கினார். உன் தம்பி சின்னகருப்பன் உழைப்பும் இறைவணக்கமும் சேர்ந்து செய்கிறான். நீயோ புற உழைப்பு என்ற ஒரு பாடத்தில் கோட்டைவிட்டு விட்டாய்’.
இனிமேல் உன் தம்பிபோல் உழைத்து வாழ்வும், இறை வணக்கத்தை விடாது செய்யவும் கற்றுக் கொள் என்ற தத்துவத்தை எடுத்து விளக்கினார். பிறகு பெரியகருப்பன் திருந்தி உயர்ந்து வாழ்ந்தார். இறைவணக்கம் என்பது மக்களோடு மக்களாக, வாழும் நமக்கு தொழிலோடு தொழிலாக, உழைப்போடு உழைப்பாக இருக்க வேண்டும்.
மனம் கசிதல்
“மனம் கசிந்து கடவுளை நாடுபவனுக்கு
உறுதிப்பாடும் பணிவும் உண்டாகின்றன.
தான் செய்யக் கிடக்கும் கடமையாது
என்பதும் அவனுக்கு விளங்குகிறது”
“இறைவன் நமது உள்ளத்தினுள் ஒளிர்கிறார்
உடலின் இன்ப உணர்வை நாம் ஒதுக்கித் தள்ள
முடியுமானால், பகவானை நம்
உள்ளே நாம் உணர முடியும்”
|
|