HOME 18 படித்தளங்கள் GURUJI  SPEECH தியானத்தின் முதற்படி மந்திரத்தின்  முக்கியத்துவம் மும் மலங்கல் 26 நற்குணங்கள்  
 

தியானத்தின் முதற்படி

அன்பே சிவம்! அன்பே சக்தி! அன்பே கடவுள்!
இங்கு வருகை தந்திருக்கும் அன்புக்குரிய இறை அன்பர்களே! வணக்கம். தாங்கள் இறை நினைப்போடு வாழ எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!
பொதுவாக 'தியானம்' என்றால் முதலில் பகவானை நினைப்பது. பிறகு அவர் நம்முள் நிலை பெற, நமக்குள் அவர் உருவம் தெளிவாக தெரிய பயிற்சி செய்து வருவது ஆகும். உதாரணமாக ஒரு நல்ல விசயத்தை நமது மனதினில் நிறுத்த பலமுறை சொல்லிப்பார்ப்போம், நினைத்து பார்ப்போமில்லையா? இதை போன்று பகவானை நிரந்தரமாக மனதினில் நிறுத்த எடுக்கும் முயற்சிக்குப் பெயர்தான் தியானம்.
 
இன்றைய காலகட்டத்தில் பலரிடம் செல்போன் என்ற அலைபேசி கையில் இருக்கிறது. ஆனால் அந்த செல்போன் பேட்டரியில் அடிக்கடி சார்ஜ் செய்து கொண்டு மின்சார சக்தியைப் பெருக்கி கொள்ள வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். இருப்பினும் இதற்கு சார்ஜர் என்ற ஒரு கருவி மிகவும் முக்கியமாகத் தேவைப்படுகிறதல்லவா! இதை போன்று தான் இறைவன் என்ற மிக்பெரிய மின்சாரத்திலிருந்து
 
நமது மனதை சார்ஜ் செய்து
நாம் தெளிவாக இயங்க
நாம் சிறப்பாக வாழ
தியானம் என்ற சார்ஜர்
நமக்கு தேவைபடுகிறது

எது எப்படியோ, நாம் இந்த உலகில் வாழ வேண்டும். முன்னேற வேண்டும் என்றால் கண்டிப்பாக இறைநினைப்பு என்ற தியானம் எல்லோருக்கும் அவசியம் வேண்டும். அதுமட்டுமல்லாது அந்த முன்னேற்றம் என்பது இரண்டு வழியிலும் இருக்க வேண்டும். ஒன்று உலகியல் வாழ்க்கை, மற்றொன்று இறை நினைப்பு வாழ்க்கை. இந்த இரண்டையும் சரிசமமாக இணைத்து உழைத்து வாழ்ந்து வந்தவர்கள்தான் வெற்றியாளர்கள். இவர்களே குடும்ப யோகி.
கதையும் கருத்தும் :
இராஜகுளம் என்ற ஊரில் தெய்வசிகாமணி என்ற அன்பர் சாப்பட்டுக்கடை வைத்திருந்தார். இவரது மனைவி பெயர் செல்ல்தாய். இருவரும் ரொம்ப பயபக்தியோடு இறை நினைப்பிலேயே தியானப் பயிற்சியும் செய்து கொண்டு சிறப்பாக வாழ்ந்து வந்தனர். எப்பொழுதும் தெய்வசிகாமணி மந்தரங்களை மனதில் உச்சரித்தபடியே வேலைகளை செய்து கொண்டிருப்பார். இவரது வருமானத்தில் வரும் லாபத்தில் 20% பகவான் தொண்டுக் காரியங்களுக்கு செலவு செய்து விடுவார். இவரது மனைவி செல்லத்தாய் இவருக்கு எப்பொழுதும் துணையாக இருந்து செயல்பட்டு வந்தாள். எளிமையாக வாழ்ந்து இறைத்தொண்டுகள் செய்து வந்த இவர்களுக்கு தொழில் வளர்ச்சியும், பொருளாதார முன்னேற்றமும் கூடிக்கொண்டே சென்றது. சிறு சோதனைகள் வரும்போதெல்லாம் பகவானை நினைத்து விரதமிருந்து, அதிகமாக மந்திரம் கூறி வந்தால் உடனே இவர்களுக்குப் பிரச்சனை தீர்ந்து விடும். இதனால் இவர்களுக்கு பகவானின் பாதுகாப்பு இருந்தது. படிப்படியாக வயது கூடிக்கொண்டே வந்தது. ஒருநாள் தனது மூத்த மகனை பார்த்து, 'எனக்கு இனிமேல் தொழிலை கவனிக்க முடியாது. இனிமேல் எல்லோரும் சேர்ந்து தொழிலை கவனித்து கொள்ளுங்கள் என்று கூறினார்'. எல்லோரும் அதற்கு சம்மதித்தனர். அதன் பிறகு அவர் நல்ல குருநாதரைத் தேடிக்கண்டரிந்து தியானத்தின் முதற்படியில் இருந்தவர்கள் பல படிகள் முன்னேறி விட்டார். வயதானாலும் அவரது மனமும், தியானமும் சிதறவில்லை. நிலையான இறைநினைப்பில் இருக்கும் போது ஒரு நாள் அவர் உயிர் பிரிந்தது.

அப்பொழுது அவருக்கு வயது 75 இருக்கும் தெய்வசிகாமணியின் ஆன்மா இறைவனிடம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பகவான் 'தெய்வசிகாமணி உனது மனது எதிலும் ஒட்டிக்கொள்ளாது, இறை தொண்டு செய்து வெற்றி பெற்று என்னிடம் வந்துள்ளாய், உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டார்

அதற்கு தெய்வசிகாமணி, 'பகவானே எனக்கு நரகம், சொர்க்கம் இரண்டையும் பார்த்துவிட்டு உங்களிடம் வந்து சேரவேண்டும்' என்றார். பகவான் கூட்டிச்செல்ல உத்தரவிட்டார். தெய்வசிகாமணி நரகத்தை சென்று பார்தது கொண்டிருக்கும் போது அங்கு ஒருவர் வலது கை இல்லாமல் தனிமையில் இருந்து அழுது கொண்டிருந்தார்.

ஐயா, 'ஏன் அழுது கொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்டார்

அதற்கு அவர் 'நான் பூமியில் செய்யாத தப்பு எதுவும் பாக்கி இல்லை. இதையெல்லாம் சொல்லித் திருத்த என் தாய் தந்தைக்கு இறைபக்தி கிடையாது. இப்பொழுது நான் துன்பப்பட்டு கொண்டு இருக்கிறேன' என்றான்.

இதை கேட்டு விட்டு தெய்வசிகாமணி சொர்க்கத்திற்குப் போனார். அங்கு எல்லோரும் ஆனந்தமாக இருந்தனர். அதில் ஒருவரிடத்தில் ஒரு மனிதன் கை மட்டும் உயிர் உள்ளபோல் தனியாக இருந்தது. இது தெய்வசிகாமணிக்கு அதிசயமாக இருந்தது. அப்பொழுதே உடன் வந்த பகவானின் ஏவலாளியிடம், 'இது என்ன தனித்து ஒரு கை மட்டும் சொர்க்கத்தில் இருக்கிறதே' என்று கேட்டார். அதற்கு அவர் இந்த கைக்கு உரியவன் ஒரு மோசமான ஆள். அவன் ஒருநாள் பயணம் செய்யும்போது வழியில் இறைதொண்டர்கள் பக்தர்களுக்கு அன்னதானம் கொடுத்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் இவனும் அதில் கலந்து கொண்டு வலதுகையால் சாதத்தை அள்ளி அள்ளிப் போட்டான். அந்த ஒரு புண்ணியத்தை இவன் வலக் கை மட்டும் செய்ததால்தான் அவன் கை இங்கு வந்து விட்டது என்று கூறினார். இறைவனுக்கு மிகவும் பிரியமானவர்கள் தொண்டு செய்யும் பக்தர்கள்தான் என்பதை பகவான் பலமுறை கீதையில் கூறியிருக்கிறார். இதனால் நம்மால் இயன்றவரை எல்லோரும் மற்றவளுக்கு நாம் வழிகாட்டியாக வாழ வேண்டும்.


'தன்னைத் தயார் செய்து கொண்டால்தானே
மற்றவர்களை நாம் தயார் செய்ய முடியும்'.
கேள்வி
குருநாதா நீங்கள் தியானத்தின் முதற்படியைப் பற்றி உதாரணங்களோடு ரொம்ப எளிமையாகப் பேசியதால் நன்கு புரிந்தது. நாங்கள் எப்படி தியானத்தை துவங்க வேண்டும்?
   
பதில்
பொதுவாக மனம் என்பது சும்மா இருக்காது.
1) எதையாவது பார்த்து கர்ப்பனை செய்து கொண்டிருக்கும்.
2) எதையாவது கேட்டு அதன் வழியில் மனம் எங்கோ போய்கொண்டிருக்கும்.
3) மற்றவர்களிடம் எதையாவது பேசிக் கொண்டிருக்கும். தேவையற்ற கற்பனையில் மிதக்கும்.

இப்படிப்பட்ட மனதை சிறிது நேரம் உங்கள் புத்திக் கூர்மையால் பகவானை நினைக்க வைக்க வேண்டும். இதற்கு பகவானின் உருவப்படமாகிய சிவபெருமான், கிருஷ்ணர் போன்றவைகளை வழிபடுவது சிறப்பாகும்.

இதற்காக நீங்கள் தனிமையாக போக வேண்டியது இல்லை. உதாரணமாக நீங்கள் சினிமா பார்த்துக் கொண்டிருப்பதாக வைத்துக் கொள்வோம். சிறிது நேரம் மனதை நிறுத்தி பகவானை நினைத்து விட வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால் தியானத்தின் முதல் நிலைத் தகுதியை நீங்கள் பெறுவீர்கள். அனால் உங்கள் சிந்தனைகள், பேச்சுக்கள், செயல்கள் யாவும் நல்லதை நோக்கிச் செல்லும்.

மனம் நினைத்தால் மார்க்கம் திறக்கும்
மனம் மறுத்தால் மார்க்கம் அடைபடும்
மனதை இறைவனை நோக்கி செலுத்தினால்
மகத்தான சாதனைகள் செய்யலாம்.
   
கேள்வி
நீங்கள் கூரிய தியாத்தின் துவக்கம் நன்கு புரிந்தது. குருநாதா, அடுத்து பகவானை நினைத்து தியானம் செய்ய மந்திரம் கூறுவது அவசியமா?
   
பதில்
நமது வீட்டில் இரவு நேரத்தில் ஃபேன் ஓட வேண்டும். லைட் எரிய வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள் என்று வைத்துக் கோள்வோம். அதே நேரத்தில் மின்சாரம் இல்லை என்றால் சுவிட்சை போட்டு என்ன செய்ய முடியும். இதைப் போன்றுதான் நமது உள்ளத்திற்கும், மனத்திற்கும் மின்சாரம் போன்றாது 'மந்திரம்'. அதோடு மனதை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் நிறுத்தி பகவானை நினைக்க வைக்கும் அங்குசம் என்ற சுவிட்சு தான் மந்திரம் ஒரு பெரிய விருந்து செய்ய எல்லா மதங்களிலும், ஒதுதல், ஜெபித்தல் என்று வைத்திருக்கின்றர். இதனால் மந்திரத்தை மனதில் அடிக்கடி கூறிப் பழகுங்கள். ஒரு பெரிய விருந்து செய்ய எல்லா பொருள்களும் இருந்தும் சமைக்க அந்த அடுப்புக் தீப்பொறிதான். அது இல்லாவிட்டால் சமையலும் இல்லை. சாப்பாடும் இல்லை. இதைப் போன்றுதான், 'தியானம் கூடிவர மந்திரம்' என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்

மந்திரம் கூறுபவர்கள் பகவானால் மதிப்படுகிறார்கள்.
மந்திரம் கூறாதவர்கள் தடுத்து நிறுத்ப்படுவார்கள்.
மந்திரம் தான் நம்மை மகத்தானவர்களாக்கும்.
மந்திரம் தான் காரிய வெற்றியளிக்கும்.
   
கேள்வி குருநாதா, மந்தரம் கூறுவதின் அவசியத்தை சிறப்பாக கூறி எங்களை உடனே மந்திரத்தை உச்சரிக்கும்படி செய்துவிட்டீர்கள். ந்னறி அடுத்து மந்திரத்தை எங்கிருந்து எப்படி சொல்வது.
   
பதில்
ஆலயம் சென்று வருவது அவசியம். அங்கே குருக்கள் செய்யும் முறைகளை கவனிக்க வேண்டும். பிறகு அந்தக் கோயிலை மனதில் பதிய வைக்க வேண்டும். எப்பொழுது நினைத்தாலும் உங்கள் மணக்கண் முன்னே கோயில், மூலஸ்தானம் வரும்படி செய்ய வேண்டும். அந்த மூலஸ்தானத்தில் நீங்கள் பகவானுக்கு மந்திரம் சொல்லிப் பூப்போட்டு அர்ச்சனை செய்து வரவேண்டும். இவ்வாறு செய்தால் நீங்கள் வெகுவிரைவில் உயர்வு பெறுவீர்கள். பிரச்சனைகள் கூடும் போது மந்திரத்தின் வேகத்தை நீங்கள் துரிதப்படுத்திப் பாருங்கள். சிற்ப்பான பலன் பெறுவீர்கள்

மனவேதனைகள் யாவும் பறந்தோடும்
சோதனைகள் கூட உங்களுக்கு சாதனைகளாக மாறும்.
பொறுமையோடு, நிதானத்தோடு
தொடர்ந்து சொல்லும் மந்திரம்
உங்களை உயர்நத மனிதராக்கும்
இம்மையில் சிறப்பும்
மறுமையில் உயர்வும் பெறுவீர்கள்

மனக்கோயில் கட்டிய, மாணிக்கமாகிய
' பூசலாரிடம் அரசன் மண்டியிட்டு நிற்க வில்லையா'

நீங்களும் உயர முடியும் முயன்றால்!
   
கேள்வி
மனதில் கட்கின்ற யோசனை எங்களுக்கு ரொம்ப பிடித்திருந்தது. காரணம் அவசர உலகில் மனதில் கோயிலை வைத்துக் கொண்டால் நினைத்த நேரத்தில் பூஜை செய்து விடலாம். இந்த நல்ல யோசனைக்கு ரொம்ப நன்றி. தியான பயிற்சி செய் சிறந்த நேரம் எது.
   
பதில்.
நீங்கள் உடனே தியான விளக்கங்களை புரிந்துகொன்டதை நினைக்கும் போது உங்களுக்கு பகவானின் அருள் பரிபூரணமாக இருக்கிறது. என்பதை உன்னால் உணர முடியாது. அடுத்து 1) எப்படியெல்லாம்? 2) எந்த நேரம்? என்ற இரண்டு வினாக்களை வைத்திருக்கிரீர்கள் அடுத்து இதை கொஞ்சம் கவணித்துக் கொள்ளுங்கள்

1) தியானத்திற்கு, அதாவது இறைவனை நிபைபதற்கு காலம், நேரம் என்பது கிடையாது. நடைமுறை வாழ்கையில் நூறுமுறையாவது அவ்வப்போது நினைப்பது சிறுசேமிப்பு மாதிரியாகும். சிறுகச்சிறுக சேமித்து வரும் பணம் ஒரு நாள் உங்களுக்கு மொத்தமாக கிடைப்பது.

எழுந்திருக்கும் போதே மந்திரம் சொல்லி கொண்டே எழுந்திருக் வேண்டும். பிறகு உள்ளக்கோயிலில் குருபூஜை, பகவானுக்கு பூஜை போன்றவைகள் செய்துவரவேண்டும். அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தை நாம் உருவாக்கி கொள்ள வேண்டும். நடந்து கொண்டே மனதில் மந்திரம் சொல்லி வழிபடுவது உங்களுக்கு வேகமாக முன்னேற்றத்தை கொடுக்கும். இது பெரிய பணத்தொகையை பேங்கில் போட்டு வைப்பது போன்றதாகும்.

நிதானமான செயல்கள் நம்மை மனிதனாக்கும்
   அறிவும் அனுபவமும்தான் நம்மை ஆசானாக்கும்
   
கேள்வி
நல்ல விளக்கம் தந்தீர்கள் குருநாதா. ஏநென்றால் அறிவும் அனுபவமும் மனதர்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம் என்பது எங்கள் அனுபவத்தில் நூற்றுக்கு நூறு உண்மைதான். இறைவனை நினைக்க மனம் அடிக்கடி மறந்து விடுகிறதே இதற்கு என்ன செய்ய வேண்டும்.
   
பதில்
கெட்டதை மறந்து, நல்லதை மறக்காதிருப்பதே மனித வாழ்ககையில் மகத்தான விசயமாகும். ஆனால் மனித மனமோ ஒருவர் செய்த கெட்டதை ஒருபோதும் மறக்கவே மறக்காது. இதனால் குரோதம் வளருமல்லவா!!! எதை வேண்டுமானாலும் மறக்கலாம் ஆனால் இறைவனை நினைக்க மறக்கக் கூடாது. பெரிய மனிதர்கள், பெரும் செல்வந்தர்கள், தலைவர்கள் கூட ஏதோ ஒரு பயத்தில் பகவானை நினைத்து கொண்டுதான் வாழ்கின்றனர்.

ஆனால் அவர்களின் வெற்றிக்கும் தைரியத்திற்கும் இறை நினைப்புத்தான் காரணம் என்று மற்றவர்களிடம் சொல்லமாட்டார்கள். இதனால் நீங்கள் செய்ய வேண்டியது

1) அடிக்கடி தனது உள்ளத்தில் உள்ள பகவானின் காலில் விழுந்து மானசீகமாக வணங்கி மண்ணிப்பு கேட்பது.
2) பகவானிடம் நினைவாற்றலையும், அவரை நினைக்கும் சக்தியையும் பெருக்கி தர வேண்டுவது
3) பத்து நிமிடத்திற்கு ஒருமுறை பகவான் நம்மிடம் இருக்கிறார் என்ற என்னத்தால் பாத்தை மந்திரம் சொல்லி தொட்டு பார்ப்பது. இப்படிப்பட்ட செயல்களால் பகவான் உங்கள் மறதியை ஒழித்து நினைவாற்றலை கூட்டுவார்.
   
கேள்வி
நினைவாற்றலை பற்றி கூறிய விளக்கம் தெளிவாக புரிந்தது குருநாதா. மார்கழி மாதத்தில் ஏன் கோயில்களில் விஷேசம் அதிகமாக இருக்கிறது.
   
பதில்
பூமியில் மனிதர்களுக்கு ஒருவருடம் கழிந்தால், தேவலோகத்தில் அது ஒரு நாள் ஆகும். நமக்கு ஒரு நாள் அவர்களுக்கு இரண்டு மணி நேரம் தான். தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்கள் யாவும் தேவர்களுக்கு பகல் நேரமாகிறது. ஆடி ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி தட்சிணாயனக்காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதங்கள் யாவும் தேவர்களுக்கு இரவும் காலம் ஆகிறது.

'மார்கழி மாதம் இந்தக் கணக்கின்படி விடியற்காலையாக வருவதாலும், அத்துடன் தேவர்கள் விழிக்கும் நேரமாக வருவதாலும், நமது தியானத்திற்கும், நமது பக்திக்கும், நமது பிரார்த்தனைக்கும் அவர்கள் பகவானிடம் பரிந்துரை செய்மை நம்மை உயர்த்தி விடுவார்கள்' இதனால் தான் இந்து மதம் மார்கழி மாத்தை புனித மானதாக கூறியுள்ளது. எதை செய்தாலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் நமக்கு இருக்க வேண்டும். இந்த எண்ணம் நம்மை படிப்படியாக உயர்த்திவிடும். உடனே எதையும் கற்று கொள்ள முடியாது. கார் ஓட்டிப் பழக முயல்வது போன்றுதான் பக்தியும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் காலை நேரம் நாம் கடவுளை நினைப்பதற்காக உள்ள நேரம். நடந்து கொண்டும், அமர்ந்து கொண்டும் உணரவேண்டும் வேலை பார்த்து கொண்டும் நினைக்கலாம்.
   
கேள்வி
மாதங்களில் மார்கழி என்ற பாடலுக்கு இன்றுதான் அதன் சிறப்பை அறிந்ததோம். மிக்க நன்றி எத்தனை மணிக்கு மானசீக பூஜையை நாங்கள் துவங்க வேண்டும். எப்படி பூஜிப்பது ? என்பதை பற்றி கூறுங்கள் குருநாதா.
   
பதில்
காலை நான்கு மணி முதல் ஐந்து மணிக்குள் நீங்கள் தயாராவது மிகவும் உயர்நததாகும். அப்படி முடியாவிட்டால் 5 மணி முதல் 5.30 மணிக்குள்ளாவது தயராகிவிடுங்கள். இந்த நேரம் தான் தேவர்கள் நம்மை வாழ்த்தும் நேரம் என்பதை ஒரு போதும் மற்ந்து விடாதீர்கள்

எண்ணத்தால் நீங்கள் குளித்து, ஆடைகள் அணிந்து கோயிலுக்கு செல்ல வேண்டும்

மூலஸ்தானத்தில் உள்ள பகவானை குளிக்க வைக்க பால், சந்தனநீர், பன்னீர், தண்ணீர் தயார் செய்து வைக்க வேண்டும்.

பிறகு மகாராஜாவுக்கு மாதிரி உயரந்த ஆடைகள் உடுத்திட வேண்டும். சிம்மாசனத்தில் அமர வைக்க வேண்டும்.

இரத்தினம், வைரம், வைடூரியம் பதித்த கீரீடம் தலைக்கும் மற்றும் மார்பு கை அலங்கார அணிகலன்கள் களையும் அணிந்து விட வேண்டும். பிறகு காலடியில் பூப்போட்டு

ஓம் நமசிவாய வாழ்க! ( அ ) ஓம் நமோ நாராயணாய வாழ்க
ஓம் சச்சிதானந்தம் வாழ்க ! ஓம் சற்குருநாதா வாழ்க வாழ்க !

மந்திரம் கூறி கொண்டே இருக்க வேண்டும்
   
கேள்வி
பூஜை முறை கூறினீர்கள். அதை எங்கள் எண்ணத்தால் செய்து பார்த்ததோம். அதோடு கோயில், மூலஸ்தானம் இவைகள் மணக்கன் முன் நன்றாக வர முடிகிறது. பகவானை அலங்காரமும் செய்து பார்த்து விட்டோம். இனிமேல் சாதனை என்ற பயிற்ச்சியை எப்படி துவங்குவது.
   
பதில்
அடுத்தவர்களுக்காக ஒரு வேலையை செய்து உதவும் போது நம் மனம் தெளிவாகவும் தெம்பாகவும் இருக்கும். ஆனால் நமது வேலையை அடுத்தவர்களிடம் செய்ய மனம் கூசும். அத்துடன் கெஞ்சிக் கேட்க்க வேண்டியதிருக்கும். தியானம், சாதனை, பயிற்சி என்பது நமது வேலை. பகவானை அடைய, பகவானிடம் உதவி கேட்கும் ஒரு விசயம் தான் சாதனை. தியானம் பயிற்சி என்பதாகும் பிறருக்கு பயன்படுதலில் நமக்கு மகிழ்ச்சி இருக்கும்போது பகவானுக்கும் கண்டிப்பாக ஆனந்தம் இருக்கும் அல்லவா! நமது நிலமைக்கு நாம் பகவானிடம் செஞ்சி கேட்க வேண்டுமல்லலா!

ஊனுக்ககுள் நீ நின்று உலாவிதனதைக் காணாமல்
நானென்றிருந்து நலனழிந்தேன் பூரணமே

                                                                - பட்டினத்தார்

நமது உடலில் உள்ளத்தில் வாழும் இறைவனை பற்றி பட்டினத்தார் கூறுகிறார். இதனால் உங்கள் சாதனை என்ற பயிற்சியை முதலில் அலங்காரம் செய்து முடித்தவுடன் அவருக்க அழகான மாலை ஒன்றை மானசீகமா போடுங்கள் பகவானின் காலில் விழுந்து வணங்குங்கள். பிறகு கைகூப்பி மந்திரம் கூறி பகவானை சுற்றி வாருங்கள் இதை அடிக்கடி செய்து பழகி வாருங்கள். மனக்கண் முன் கொண்டு வந்து நீங்கள் செய்வதை நீங்களே பார்க்க வேண்டும்.
   
கேள்வி
கோயில்களில் சாமியை சுற்றி வருவது போன்று நமது மானசீகமான மனக்கோயிலில் உள்ள பகவானைச் சுற்றிவரும் பயிற்சியை விட்டு விட்டுத்தான் செய் முடிகிறது. அது ஏன்? அடுத்து நாங்கள் என்ன பயிற்சி செய்ய வேண்டும்
   
பதில்
சுற்றி வரும் பயிற்சியில் விட்டு விட்டு செய்வதற்கு காரணம் உலக வேலைகளில் மனம் செல்வதுதான், பரவாயில்லை படிப்படியாக உங்கள் முயற்சி வெற்றி பெறும். ஆனால் விடாது செய்யப் பாருங்கள். மந்திரம் கூறுவது நின்றாலும் பயிற்சியானது பெட்ரோல் இல்லாத கார் மாதிரி நின்று விடும். இந்த பயிற்சிகள் அனைத்தும் உங்கள் என்னத்தில், உள்ளத்தில் மூளையில் தலைக்குள் நினைத்து மானசீகமாக செய்ப்படுவதாகும். இதை மாணிக்க வாசகர்.

இணையார் திருவடி
என் தலைமேல் வைத்தலுமே
துணையான சுற்றங்கள்
அத்தனையுந் துறந்தொழித்தேன்

என்று பாடுகிறார். பகவானை எண்ணத்தில் தலைக்குள்ளே கொண்டு வந்தபின் உலகத்தில் சிற்றின்பம் என்றிருந்த ஏகப்பட்ட சுற்றங்களை எல்லாம் தூக்கி எறிந்து விட்டேன் என்கிறார். எது எப்படி போனாலும் இல்லறம் நடத்தி பேரின்பம் பெறுவதே மேலான செயல். நாம் இரண்டையும் சமமாகக் கொண்டு வரமுடியும். அதற்கு நாம் கூறியபடி பயிற்சி என்ற சாதனங்களை ஒவ்வொன்றாக செய்து வரவேண்டும். அடுத்தபடியாக, நீங்கள் பகவானை தோளில் சுமந்து, மந்திரம் கூறிக் கொண்டே சுற்றி வரும் பயிற்சியை செய்ய வேண்டும். பகவான் அமர்ந்திருக்கும் சிம்மாசனத்தை சுற்றி உங்கள் எண்ணத்தால் மற்றொரு பகவானை அதாவது உற்சவரை – உருவாக்கி தோளில் சுமந்து சுற்றி வர வேண்டும்.
   
கேள்வி
எண்ணத்தான் தோளில் பகவானைச் சுமந்து வரும்போது யோயிலில் உற்சவரை பல்லக்கில் சுமந்து வரும் காட்சி நினைவிற்கு வருகிறது. எல்லாமே நமது இந்து மதத்தில் பரிபாஷையாகத் தான் கூறியிருக்கின்றனர். நீங்கள் கூறியவுடன் பயிற்சியை மந்திரம் சொல்லி செய்து பார்த்தோம். ஒரு புத்துணர்ச்சி பிறக்கிறது, நன்றி அடுத்தபடியாக திருக்கல்யாணம், இருமுடிகட்டுவது என்பதற்கு என்ன அர்த்தம் குருநாதா?
   
பதில்
'திரு' என்றால் 'பகவான்' கல்யாணம் என்றால் இருவர் இணைதல். அந்த இருவரில் ஒருவர் நமது மனம். மற்றொன்று நமது அறிவு ஆகும். அறிவு என்ற பகவானை நமது மனம் சார்ந்து வாழ வழிவகுக்கும் முறையே திருக்கல்யாணம். இதனால் மானசீகமாக உங்கள் உள்ளக்கோயில் ஆண், பெண் இருவருமே பெண் போன்று அழகாக மகாராணி போன்ற அலங்காரம் செய்து பகவானை சுயம்வரத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அப்பொழுது அங்கு பகவான் என்ற அறிவும், நமது மனமுனம் இணைவதே இருமுடி. இந்த நடைமுறைத் திருமணத்தில் சேலையும், வேஷ்டியையும் முடி போட்டு விடுவர். பார்த்திருப்பீர்கள்.

விளக்கம் :
1) மீன் தூன்டிலில் சிக்கிக் கொள்வது 'சுவையால்'
2) இரவில் எரியும் நெருப்பில் பற்று வைத்து விட்டில் பூச்சி அதில் விழுந்து இறந்து விடும்.
3) அறிமுகம் இல்லாத யானையின் ஸ்பரிசத்தை நம்பி யானை பிடிபடுகிறது
4) 'இனிமையான ஓசையை' நம்பி மான் வலையில் மாட்டுகிறது.
5) 'வாசனையை' நம்பி வண்டுகள் மலரில் மாட்டிக் கொள்கிறது.

இதை போன்றுதான் மனிதன் தனது ஐம்பொறிகளை நம்பி ஓடிவிடாமல் அடக்க பகவானோடு இணைய எடுக்கும் முயற்சியே திருக்கல்யாணம் இருமுடியாகும். இதனால் இறைக்கவசம் உங்களுக்கு கிடைக்கும். இறைவனைத் திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்கள் உள்ளத்தில் பகவானுக்ககு பணிவிடை செய்து உயர்வடையுங்கள்.
   
கேள்வி
நீங்கள் சொன்ன உடனே மானசீகமாக சுயம்வரம் நடத்திப் பார்த்து பகவானோடு இணைந்து விட்டோம். சரியான விளக்கம். அடுத்து நமது தலைக்கு நான்கு திசை இருப்பதாக கூறுகிறார்கள் வள்ளலார் ஐயா அவர்கள் கிழக்கறியேன், மேற்கறியேன் என்று கூறியிருக்கிறார்கள். தயவு செய்து நமது தலையின் திசையையும் நான்கு திசைப பயிற்சியை பற்றியும் கூறுங்கள் குருநாதா.
   
பதில்
ஒரு வங்கியில் பணியாற்றுபவர் எத்தனையோ கிளைகளுக்கு மாற்றப்பட்டிருப்பார். அடுத்து ஏதாவது ஒரு வங்கியில் பணியாற்றும்போது பதவி உயர்வு பெற்றிருப்பார் இல்லையா? இதைப் போன்றுதான் உங்கள் ஆன்மா, பரமாத்மாவின் வங்கியில் பணியாற்றுகிறது. இப்பொழுது உங்கள் உடம்பு என்ற கிளையில் பணியாற்றுகிறது. இதில் நல்ல பதவி உயர்வு பெற கண்ணும் கருத்துமாக உழகைகவேண்டியது அவசியமில்லையா?

உடலுக்கு வயது வரம்பு உண்டு
ஆனால் ஆத்மா எல்லையற்றது,
ஆத்மாமேல் ஆதிக்கம் செலுத்துபவன் பகவான்

இப்பொழுது நமது கிளை மேலாளராக பணியாற்றும் நமது ஆத்மாவிற்கு நமது புத்தி, மனம் போன்ற உதவியாளர்கள் ஒத்துழைப்பாக இருந்து பகவானின் இந்த கிளையான நம்மை உயர்த்த வேண்டும். கிளையின் வளர்ச்சிக்காக எடுக்கப்படும் பல திட்டங்கள் இருப்பது போல் நான்கு திசைப் பயிற்சியும் ஒன்றாகும்.

1) தலையின் பின்பகுதிக்கு மேல் கொண்டை சுழி இருக்கும் இடம் தெற்குப் பகுதியாகும்.
2) நெற்றிப்பொட்டு வைக்கும் இடம் இவைகள் வடக்கு பகுதியாகும்.
3) வலது காதிற்கு அருகாமையில் உள்ள தலைப் பகுதி கிழக்காகும்.
4) இடது காதிற்கு அருகாமையல் உள்ள தலைப் பகுதி மேற்காகும்.

பகவானை தோனில் குழந்தையை சுமப்பது போல் தூக்கி கொண்டு உங்கள் உள்ளக் கோயிலின் வடக்கே வந்து பிறகு கிழக்கே சுற்றி வந்து தெற்கே வந்து நிற்க வேண்டும். மீண்டும் வடக்கே வந்து மேற்கே சுற்றி வந்து தெற்கை வந்தடைய வேண்டும். பயணத்தில் நிதானமாக மந்திரம் சொல்லிக் கொண்டே செல்ல வேண்டும். இவ்வாறு செய்துவந்தால் ஆனந்தம் கிடைக்கும்.
   
கேள்வி
திசைகளை பற்றி கூறியது நன்றாக புரிந்தது. அடுத்து கோயில் குளம் பற்றிய விபரங்களை சிதாவது கூறுங்கள்? குருநாதா
   
பதில்
வெளியில் கோயில் கட்டியிருப்பதை பார்த்து அவரவர் பக்திக்கு ஏற்ப மானசீகமாக கோயிலை மனதில் கொண்டு வந்து நிறுத்தி வணங்குவதற்குத்தான் கோயில் குளம் கட்டப்பட்டது. மானசீகமாக பகவானை வணங்கும், பூஜிக்கும் முறையை கோயிலில் குருக்களால் போதிக்கப்பட்டு வருகிறது. சான்றோர்களின் சந்திப்பும், வாழ்த்தும் பெறும் இடமாகவும் கோயில் இருக்கிறது. அடிக்கடி கோயிலைப் பார்ப்பதால் நமது மானசீகக் கோயில் அமைப்பை சீர்படுத்தி அமைத்துக் கொள்ளலாம். இதனால்தான் கோயில் உள்ள ஊரில் தான் மக்கள் குடியிருக்க வேண்டும், இல்லாத ஊரில் குடியிருக்காதே என்று ஒளவையார் கூறியிருக்கிறார். விஞ்ஞானிகள் ஒரு கண்டுபிடிப்பிற்கு பார்முலா கொடுத்த மாதிரிதான் மெய்ஞ்ஞானிகள் சூத்திரம் என்ற பயிற்சி பார்முலாவை கொடுத்துள்ளனர். அதைத் தெரிந்து கொண்டும் சிலர் மனதினில் பயிற்சி செய்வதில்லை. மறுமையில் வாழப்போகும் உண்மை தெரியாதால் பக்தியில் ஆர்வம் இல்லை. தயவு செய்து ஆர்வத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

1) வெளியில் உள்ள கோயில்தான் மனக்கோயிலாக மாறுகிறது.
2) குளம், நம்மை பார்க்கும் கண்ணாடி(தெளிவு).
3) குளத்து நீர்தான் அணுக்களை புதுப்பிக்கும் தீர்த்தம்.

இதுவும் நமக்குள்ளேதான் இருக்கிறது.
   
கேள்வி
குருநாதா! எனக்கு அடிக்கடி கனவு வருகிறது. இதனால் கனவை பற்றி புரியும் படி சிறிய விளக்கம் கொடுத்தல் நல்லது.
   
பதில்
நமக்குள்ளே பகவான் போன், டிவி என்ற இரண்டையும் வைத்திருக்கிறார். இதை உணர்ந்து அனுபவித்த விஞ்ஞானிகள் தான், மற்றவர்கள் வெளி உலக நிகழ்ச்சிகளை கேட்க்கப் பார்க்க இரண்டையும் கண்டறிந்தனர். விஞ்ஞானத்தில் பெரும் முன்னேற்றமும், கண்டுபிடிப்பும் செய்த நாட்டினர பக்தியில் இறைவணக்கத்தில் பெரும் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். கடவுள் முதலில் மற்றவர்கள் பிறகுதான் என்பதே அவர்கள் வேதாந்தமாக இருக்கிறது. கனவு கானும் போது சிலருக்கு நிஜமாகவே நடப்பது போன்ற உணர்வு இருக்கும். வெளிச்சம் நன்றாக தெரியும். உருவம் ஆடையின் கலர், பசுமையான காட்சிகள் போன்றவைகள் நன்கு தெரியும். பலருக்கு பயம்படும்படியான நிகழ்சிகள் கனவாக தெரியும் தண்ணீர், நெருப்பு இப்படித்தெரியும். சிந்தியுங்கள், கண்ணை மூடினால் நமக்க இருட்டுதான் தெரியும். அதுவும் தூக்கத்தில் அந்த இருட்டும் தெரியாது. அப்படிப்பட்ட தருணத்தில் உங்கள் உள்ளே இருக்கும் டி.வி.யில் பகவான் சினிமா ஓட்டுகிறார் என்றால் எப்படி என்று நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
   
கேள்வி
பகவானை மூலவர், உற்சவர் என்று அழைக்கின்றனர் குருநாதா! இதற்கு சுறுக்கமான ஞானவிளக்கம் கூறுங்கள் நாங்கள் புரிந்து கொள்வோம்.
   
பதில்
மூலம் என்பது 'அதிலிருந்தே மற்றவைகள்', 'நிலையானது' முதலானது என்பது பொருளாகிறது.
உற்சவர் என்பவர் மூலவரில் இருந்து வந்து அவர் செய்வதை இவர் செய்வார்.
நீங்கள் மூலவரிடம் வலது பக்கம் அமர்ந்து கொண்டு உங்கள் உள்ளத்தில் இருக்கும் டி.வி.யில் வெளியில் உற்சவர் பவனிவருவதை பார்க்க வேண்டும். கோயிலை உற்றசவர் பல்லக்கில், தேரில். காரில் சுற்றி வருவதை பார்க்க வேண்டும்.
   
கேள்வி
கோயில் குளத்தை சுற்றி வந்தால் புண்ணியம் கிடைக்கும். இதனால் காரியம் வெற்றியாகும். என்று கூறுகின்றனர். தயவு செய்து கொஞ்சம் புரியும்படி கூறுங்கள் குருநாதா.
 
பதில்
கோயிலும் குளமும் கொண்ட கோயில்களில் தனித்தனியாகவும் அதற்கு இடையில் ரோடு வசதியும் கொண்டதாக இருக்கும் இப்பொழுது மூலவர் அருகில் நீங்கள் அமர்ந்து கொண்டு உற்சவரை பல்லக்கில் தூக்கி வருவதை நீங்கள் என்னாத்தால் பார்த்தக்கொண்டிருக்க வேண்டும். குளத்தையும் கோயிலையும் எட்டு என்ற அமைப்பில் நீங்கள் சுற்றி வரவேண்டும். பிறகு கார், தேர் மாதிரி ஜோடித்து இப்பொழுது பவனி வருவதை பார்த்திருப்பீர்கள். அதைப்போன்றும் நீங்கள் பயிற்சி செய்தால் சிறப்பான பலகன்கள் கிடைக்கும்.
 
கேள்வி
குருநாதா! ஒரு சிறிய வேண்டுகோள் குடும்ப யோகிகள், ஞானிகள், சற்குரு இப்பொழுது எங்கு இருப்பார்கள். அவர்கள் எப்படி கண்டுபிடிப்பது? நாங்கள் என்ன செய்ய வேண்டும்.
 
பதில்
பக்தியை நன்கு செய்து பகவான் மேல் அன்பு செய்து வந்தால் குடும்ப யோகியாகிய நல்ல குருமார்கள் அறிமுகம் கிடைக்கும். உங்கள் மனதிற்கு திருப்தியளிக்கும் அளவிற்கு உண்மையை, அதாவது சத்தியத்தை பரிசாசையை விளக்கி கூறுவார்கள். உங்களிடம் அவர்கள் எதிர்பார்ப்பது, எவ்வளவு நேரம் பகவானை நினைத்தாய். எவ்கவளவு ஆத்மாக்களுக்கு நல்லது செய்தாய் என்பதை தவிர வேறொன்றும் இருக்காது. ஞானிகள் தனிமையில் கோயில், ரோடு போன்ற இடங்களில் அழுக்கு ஆடையில பல்வேறு தோற்றத்துடன் ஆனந்தத்தில் திரிவார்கள். இவர்கள் யாவரும், நல்ல ஆத்மாக்களின் தொண்டர்கள். பூமியல் பகவான் சற்குருவாகி இருந்து கொண்டு ஆங்காங்கே மக்களுக்கு அருள் பாலித்து வர ஞானிகள், யோகிகளை நியமித்திருக்கிறார். ஞானிகளை பார்த்தால் வணங்கிவிட்டு உணவு, குடி பானங்கள் வாங்கி கொடுத்துவிட்டு செல்லலாம். ஆனால் அவர்களிடம் அதிக நேரம் செலவு செய்ய முடியாது இப்பொழுது அவதார புருஷர் சற்குரு பகவான் ஞானகுருநாதர் ஞானவள்ளல் கணக்கன்ப்பட்டி பழனி அருகில் இருக்கிறார். மக்கள் அலை அலையாக வந்து செல்கின்றனர். அங்கு சென்று தரிசிக்கலாம். ஆனால் இதுவரை சொன்ன பயிற்சியெல்லாம் செய்து கொண்டு சென்றால் வாழ்த்து கிடைக்கும். இல்லாவிட்டால் பகவான் விரட்டி விடுவார்.

முழுமையான தியான விபரங்கள் தெரிய, உயர்வு பெற சற்குரு தியானம் செய்ய ஞாயிற்றுகிழமை தோறும் தியான சபை நடத்தி வருகிறோம். ஆர்வமிருந்தால் வாருங்கள். கட்டணம் கிடையாது . காலை 11 மணிமுதல் மாலை 3 மணிவரை உணவு இலவசம். நத்தாநல்லூர், வாலஜாபாத் அருகில், காஞ்சிபுரம் மாவட்டம். பஸ் எண். 79, 579, 579யு (தாம்பரம் வழி)
   
கேள்வி
குருநாதா! எங்களுக்கு மனம் அடிக்கடி பின்வாங்கவும் செய்கிறது. பகவானை பற்ற வேண்டும் என்ற ஆர்வமும் இருக்கிறது. தயவு செய்து இதைப் பற்றி ஏதாவது கதைகளோடு கருத்து சொல்லி தெளிவு படுத்தினால் உங்களுக்கு கோடிப் புண்ணியமாக இருக்கும்.
 
பதில்
தெளிவறி யாதார் சிவனை யறியார்
தெளிவறி யாதார் சிவனு மாகார்
தெளிவறி யாதார் சிவமாக மாட்டார்
தெளிவறி யாதார் தீரார் பிறப்பே

                              - திருமந்திரம்

எளிமையாக புரியும்படி திருமந்திரம் நமக்கு கூறுகிறது . நாம் தெளிவடைய இறை நினைப்பும், தியானப் பயிற்சியும் வேண்டும். இதுவரை நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்படி பயிற்சிகளை மேற்கொண்டால் உங்களுக்கு தெளிவும் இறையருளும் கண்டிப்பாபகக் கிடைக்கும். அவ்வப்போது மனம் சோர்வடையும் போது, சோதனைகள், பிரச்சனைகள் மனதை வெளியில் இழக்கும் நேரத்தில் எண்ணத்தில் பகவானை பற்றிக் கொண்டு மந்திரம் சொல்லி வர வேண்டும். மனம் எப்போதும் பேதமின்றி சன்மார்க்கமாக இருக்க வேண்டும். எல்லோரிடமும் அன்பாக பேசிப்பழக வேண்டும். எதிலும் அளவு எல்லை வைத்தே பழக வேண்டும். எதிலும் சத்தியத்தை கடைபிடியுங்கள் . உண்மை இறைவனுக்குப் பிடித்தவை. அச்சம், ஆணவம் இரண்டும் முட்டுக்கட்டை. இது உடனே போகாது. இதனால் பவானிடம் அடிக்கடி காலில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து அதைப்போக்கித் தர வேண்டுங்கள். திராசு என்ற துலாபராம், எநத பொருளையும் எடை எண்ணவோ. அதை உள்ளபடி எடைபோட்டுக்காட்டகிறது. இது போன்றுதான் நமக்குள்ளே இருக்கும் புத்தி முறையான விசாரனை செய்து வழிகாட்டுகிறது. இதனால் புத்தியானது பகவானை நாம் நெருங்க வழிகாட்டும். இதனால் மனம் போன போக்கில் போகாது புத்தியை பயன்படுத்த வேண்டும். நமது செயல்பாடுகளில் விசாரனை இருக்க வேண்டும். இதனால் மனிதன் பகவானைச் சார்ந்திருந்தே தனது ஆற்றல் அறிவை பெருக்குகிறான். தனக்குரிய எல்லாவற்றறையும் பகவானிடம் கேட்டு உழைத்துப் பெறுவதே ஒரு யோகம்தான். பொதுவாக கடவுளை அடைய வேண்டும் என்ற எண்ணம் ஒருவருக்கு வந்து விட்டால் அவர் பெரிய புண்ணியவான். எதிலும் பக்குவப்பட்ட ஒரு பக்தனிடம், எவருடைய கோபமும் பக்தனை பாதிப்பதில்லை. அவர் பகவானே என்ற சரனாகதி நிலையை அடைந்து விடுகிறார் தனது போக்கை நாம் ஒரு சாட்சியாக இருந்து பார்த்துப் பழக வேண்டும். அப்பொழுது நல்லது கெட்டது நமது செயல்பாட்டில் தெரியும். ஏகாந்தமாக இருக்கும் போது ஸ்கேன் பொன்று உள்ளத்தை உள்ளபடி காட்டிவிடும் அப்பொழுது புத்தி கொண்டு தான் செய்யும் தவறுகளை களi எடுத்து விட வேண்டும். நமது உள்ளம் நாம் வைக்கும் எண்ணத்தைப் பொறுத்துதான் இருக்கிறது. ஒரு குளிர்சாதனப் பெட்டியில் நல்ல பொருள்களை வைத்தால் அது ரொம்ப நாட்கள் நல்லதாகவே இருக்கும் ஆனால் அழுகிபோன, நாற்றமான பொருளை குபையில் போட வேண்டியதை கொண்டு போய் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது எப்படி நியாயமாகும். இதை போன்றுதான் நாம் நல்ல சிந்தனைகளோடு இறைவன் சாரந்த கருத்துக்கள் யாவையும் பத்திரமாக உள்ளத்தில் அசைப்போட்டு பார்க்க வேண்டும். மனம் சில நேரங்களில் சூறாவளி, புயல் போன்று சுழற்றி நம்மை அடிக்கும். அப்பொழுது ஆத்திரம் எங்கிருந்துதான் வருமோ தெரியாது. அப்படி வந்து உங்களை அலைக்கழிக் பார்க்கும். இந்ந நேரத்தில் பகவானின் நினைப்பை முடுக்கி விட வேண்டும். மந்திரம் சொல்ல ஆரம்பித்து விட வேண்டும். அடிக்கடி நம் மனதில் இறை நினைப்பு இருக்கிறதோ இல்லையோ என்ற சோதனையை நாம் நடத்தி பார்க்க வேண்டும். குறிப்பிட்ட தூரம் வரைதான் மேலே போகும் பொருளை தன்பக்கம் இழுக்கும். அதற்கு மேலே போனால்அது மிதக்கும். பூமிக்கு இழுக்கும் சக்தி இருக்காது. இதை போன்றுதான் நமது குற்றங்களைக் கண்டறிந்து பகவானிடம் கெஞ்சிக்கேட்டு சரணாகதியும், தியாமும் நமக்குள் வரப் பெற்றவுடன் நம்மை மாயை என்ற ஈர்ப்பு சக்தி ஒன்றும் செய்ய முடியாது. ஆத்மா பிரகாசமாகி விடுகிறது. முயன்றவர், நம்பிக்கை உள்ளவர் உறுதியாக வெற்றி பெறுவர்.
:  
 
கதையும் கருத்தும் :


பீஸ்மர் பஞ்சபாண்டவர்களின் பாட்டனார். இவர் தர்மருக்குக் கூறும் கதை ஒன்றை நன்கு கவனியுங்கள்.

ஒருவர் காட்டில் பல மாதங்கள் தவம் செய்தார். தான் எப்படியும் இறை நிலையை அடைய வேண்டும், இறைவனோடு கலந்து விட வேண்டும், அத்துடன் முக்தி பெறுவதே அவரது கொள்கையாகவும் இருந்தது. தொடர்ந்து தவத்தை மேற்கொண்டிருக்கையில் ஒரு நாள் கடும் மழை பெய்ய ஆரம்பித்தது. அப்பொழுது அவர் மழையில் நனைந்து விடாமல் இருக்க காட்டு எருமை ஒன்று வந்து அவரை தனது மடிக்கு கீழ் இருக்மாறு நின்று கொண்டு மழையில் நனையாமல் பாதுகாத்தது. ஆனாலும் கனமழையின் வெள்ள பெருக்கினால் வந்த தண்ணீர் அவர் உடம்பில் பட்டு தவம் கலையப்பட்டு கண்விழித்து பார்த்தார். ஒரு பெரிய வளமான காட்டு எருமை செய்த உதவிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். சிறிது நேரத்தில் எருமை மாடு அந்த இடத்தை விட்டு நடந்து சென்றது. அதன் உடல் சதைப்பற்றை கண்ட அவருக்கு எண்ணம் மாறயது. இறை நினைப்பில் இருந்து விடுபட்டார். உடனே பசி வயிரை எரித்தது. அடுத்து இந்த மாட்டை அடித்து சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்ற கற்பனை தோன்றியது. அடுத்த நொடியில் சுதாரித்து கொண்டார். இவ்வளவு காலம் செய்த தவத்தை மாயை ஒரு நிமிடத்தில் கவிழ்த்து விட்டு விட்டதே என்று வருந்தி அழுது கொண்டே ஒரு மலை உச்சியில் ஏறி குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அப்பொழுது ஒருவர் தோளில் கை வைத்து அழுத்துவதை உயர்ந்து திரும்பினார் பகவானின திவ்விய தரிசனம் கிடைத்தது. மனம் மகிழ்ந்தது காலில் விழுந்து அழுதார் பகவான் அவருக்கு முக்தியளித்தார் என்பது அந்தக் கதை . கருத்தை பாருங்கள் எப்படிப்பட்டவராக இருந்தாலும் மனம் மாயையோடு சேரந்து வேலை செய்யப் பார்க்கும். நாம் தான் சுதாரித்து உணர்ந்து பகவானை பற்றிக் கொள்ள வேண்டும்.
 
நீக்கிமலக் கட்டறுத்து
நேரேவெளியில் எமமைத்
தூக்கி வைக்கும் தாளைத்
தொழுதிடுநாள் எந்நாளோ
                                        - தாயுமாணவர்

ஆசை, பகை, பயம் என்ற மூன்றும் தான் மனிதன் பகவானை நினைக்க விடாது கட்டி போட்டு விடுகிறது. இவைகளின் கட்டை நான் வெட்டியெறிந்து விட்டு பகவானே உனது பாதத்தை விடாது தொழுது கொண்டிருக்கும் நாள் எப்பொழுது எனக்கு வருமோ என்ற தாயுமாணவர் ஏங்கி பாடுகிறார். பொதுவாக ஒரு இருள் நிரம்பிய அறையில் மின்சார விளக்கு இருந்தாலும் அதன் சுவிட்சை போட்டால்தான் வெளிச்சம் தருகிறது. இதை போன்றுதான் நாமும். இறை சக்தி நிறைந்திருந்தாலும் நாம் அதை பயன்படுத்தாதிருந்தால் விளக்கு இருட்டில்தான் இருக்கும். அது வெளிச்சம் தராது. பகவானை தினம் 100 தடவை நினைத்து மந்திரம் சொல்லிப்பழகுங்கள். பிறகு 1000 தடவையாக மாற்றுங்கள். அடுத்து எதைச் செய்தாலும் பகவானை நினைத்துக் கொண்டே அனுதினமும் மந்திரம் சொல்லிக் கொண்டே இயங்கப் பழகுங்கள்.